ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று கூறும் தினகரனை வரலாறு மன்னிக்காது - ஜெயக்குமார்
சசிகலா, தினகரன் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தினகரன், திவாகரனின் நாக்குகள் நயவஞ்சகத்தனமானவை என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். தினகரனை வரலாறு மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, தினகரன் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவங்கள் என்றார்.
இவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர்.

தகுதியில்லை
சசிகலாவை ஜெயலலிதா விட்டுவிட்டார் என திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சிக்க அவர் தகுதியில்லாதவர். தினகரன், திவாகரனின் நாக்குகள் நயவஞ்சகத்தனமானவை.

தினகரன் பேட்டி
தினகரன் ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்கிறார். இவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரன், ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று கூறியிருந்தார்.

தவறாக பேசவில்லை
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்எல்ஏ வெற்றிவேல், எந்த சூழலிலும் ஜெயலலிதாவை சசிகலாவோ, குடும்பமோ தவறாக பேசியது கிடையாது என்று கூறியுள்ளார்.

கோமாளி ஆட்சி
எல்லா சூழலிலும் ஜெயலலிதாதான் எல்லாமே என்று சசிகலா இருந்தார். ஜெயக்குமார் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. தமிழகத்தில் கோமாளித்தனமான ஆட்சி நடந்தால், ஆளுநர், பாஜக என யார் கை வேண்டுமானாலும் ஓங்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications