மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்த ஹிட்லரின் முக்கிய "மர்மம்" அம்பலம்
பெர்லின்: இங்கிலாந்து நாட்டில் ஒரு பாடல் உண்டு. அது ஹிட்லரைக் கிண்டலடிக்கும் பாட்டு.. அந்தப் பாடல் தற்போது உண்மையாகி விட்டது. சமீபத்திய ஹிட்லரின் மருத்துவ அறிக்கைகள் குறித்த ஒரு ஆய்விலிருந்து அவருக்கு ஒரே ஒரு விதைதான் (testicle) இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்தக் குறைபாட்டுக்கு cryptorchidism என்று பெயராகும். அதாவது வலது பக்கம் விதை இவருக்கு இல்லை. இல்லை என்றால், விதையே இல்லை என்று அர்த்தம் கிடையாது. மாறாக உள்ளிருந்து வெளியே இறங்கவில்லை (undescended) என்று பொருளாகும்.
இந்த விவரத்தை ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் ஒருவர் வெளிக் கொணர்ந்துள்ளார். ஹிட்லரின் பல்வேறு மருத்துவ ஆவணங்களைப் பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார். நீண்ட காலமாகவே ஹிட்லருக்கு ஒரு விதைதான் இருந்ததாக கூற்றுகள் உண்டு. இதை வைத்துத்தான் இங்கிலாந்தில் கிண்டல் பாட்டும் பல காலமாக இருந்து வருகிறது.

1923ல் சோதனை
1923ம் ஆண்டு ஹிட்லர் கைது செய்யப்பட்ட சமயத்தில் மருத்துவ சோதனை நடந்தது. அப்போது தயாரிக்கப்பட்ட ஆவணத்தில்தான் அவருக்கு விதைப் பையில் ஒரு விதை மட்டுமே இருந்தது தெரிய வந்து அதைப் பதிவு செய்துள்ளனர்.

வேறு பிரச்சினை இல்லை
இதுதவிர அவருக்கு உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஹிட்லரைப் பரிசோதித்த லான்டர்ஸ்பெர்க் சிறையின் மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜோசப் ஸ்டெய்னர் பிரின் என்பவர் எழுதியுள்ளார்.

ஏலத்தில் வந்த மர்மம்
இந்த மருத்துவ ஆவணங்கள் எங்கே என்பது தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பவேரியாவில் நடந்த ஏலத்தில் இது ஏலம் விடப்பட்டது. ஆனால் பவேரிய அரசு உடனடியாக இதைப் பறிமுதல் செய்து விட்டது. சமீபத்தில்தான் இந்த ஆவணங்களை எர்லாங்கன் -நூரம்பர்க் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுப் பேராசிராயிர் பீட்டர் பிளீச்மேன் விரிவாகப் படித்து ஆய்வு செய்து விஷயத்தை வெளியில் கூறியுள்ளார்.

இறங்காமல் உள்ளேயே தங்கியதால்
வழக்கமாக பிறப்புக்கு முன்பாக ஆண்களின் விதைகள் உடலுக்குள்ளேதான் இருக்கும். பிறக்கும்போது விதைகள் இரண்டும் வெளியே இறங்கி விதைப் பையோடு ஆணுறுப்புக்குப் பின்புறமாக வந்து விடும். சிலருக்கு வலது புற விதை மட்டும் இறங்காமல் போகும்போது இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.

குண்டு பட்டு சேதமாகவில்லை
முன்பு ஹிட்லரின் ஒரு பக்க விதை, துப்பாக்கிக் குண்டு பட்டு சேதமடைந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. முதல் உலகப் போரின்போது இது நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல என்று இப்போது தெரிய வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications