"கிஸ் கிஸ்" போராட்டத்திற்கு இந்து முன்னணியின் பதிலடி "தூ... தூ"...!
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்திய முத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி அமைப்பினர் திங்கள்கிழமை ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சில் துப்பி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் நவம்பர் 2ஆம் தேதி கிஸ் ஆப் லப் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். இதனை கண்டித்து கேரள மாநில பாஜக மற்றும் சில அமைப்புகள் அவர்களை விரட்டி அடித்தனர்.

கேரள மாநிலத்தில் முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை ஐஐடி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில், சென்னை ஐஐடி நுழைவு வாயிலில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஐஐடி நுழைவு வாயில் முன்பு எச்சிலை துப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த முத்தங்களை பரிமாறிக்கொள்வது தமிழக பண்பாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது. இதுபோன்று பொது இடங்களில் மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்று தெரிவித்தனர்.
காவல்துறையிடம் அனுமதி பெறாமல் இந்த போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மாணவ மாணவிகள் முத்தங்களை பரிமாறிக்கொள்வதற்கு ஐஐடி நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது. சென்னை காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினர். இதுபோன்று தமிழகத்தில் எங்கும் இனி நடைபெறக் கூடாது என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications