தொடர் மழை: சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நவ.29 வரை மீண்டும் விடுமுறை அறிவிப்பு !
சென்னை: மழையின் காரணமாக சென்னையில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் வருகிற 29ந் தேதி வரை மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வழக்கம்பேல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவம்பர் 28 மற்றும் 29 ந் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட 24 பள்ளிகளுக்கு வரும் 29ந் தேதி வரை மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 24 பள்ளிகள் குறித்த விவரம்:
அரசுப் பள்ளிகள்:
1. அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்.
2. அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
3. அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம், பிராட்வே.
4. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
6. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
அரசு உதவிபெறும் பள்ளிகள்:
7. ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
8. ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
9. மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி. எழும்பூர்
10. கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி. ஓட்டேரி.
11. புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
அரசு - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்:
12. அரசு தொடக்கப் பள்ளி. சிட்கோ நகர், வில்லிவாக்கம்.
13. அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்.
14. திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
15. அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி. வேளச்சேரி.
16. சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
17. புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை.
18. புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு.
19. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.
மாநகராட்சிப் பள்ளிகள்:
20. சென்னை நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்.
21. சென்னை தொடக்கப் பள்ளி, கோயம்பேடு.
22. சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் சாலை, சைதாப்பேட்டை.
23. சென்னை நடுநிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்.
24. சென்னை நடுநிலைப்பள்ளி. திடீர் நகர். சைதாப்பேட்டை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications