தொடரும் கன மழையால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஒரு கன மழை தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையிலும், புறநகர்களிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் பேய் மழை பெய்து வருகிறது. அங்கு 10 மணி நேரத்தில் 19 செமீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதேபோல பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் உஷாராக இருக்குமாறும், குறிப்பாக மணி முக்தா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கலெக்டர் சுரேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும்,அதற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications