திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை.. என்ன மேட்டர்?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், சிறப்பு தினங்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, மற்றொரு நாளில் வேலை நாளாக ஈடுகட்டப்படும். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 24) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவிற்காக நவம்பர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கல்வி, அரசு நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜம்புவான் ஓடை தர்காவில் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நவம்பர் 24ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அன்றும் (நவம்பர் 25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதை ஒட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் விடுமுறை என்பதால் திருவாரூர் மாவட்டத்துக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஆகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications