ஐஸ்வர்யாராய், ஷில்பா ஷெட்டி வழியில் ‘முகமூடி’ பூஜா ஹெக்டே.. இந்தியில் ஜெயிப்பாரா?
பெங்களூர்: நடிகைகள் ஷில்பா ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராய் வழியை பின் தொடர்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. பாலிவுட்டுக்குள் தனது அழகிய காலை எடுத்து வைத்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. முதல் படம் சொல்லிக் கொள்ளும் படி அமையாததால் தமிழ் சினிமா இவரை வரவேற்கவில்லை. முகமூடி படத்தில் நடித்தவருக்கு தமிழில் முகவரி இல்லாமல் போய் விட்டது.
அதனால், தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கிய பூஜா தற்போது அங்கிருந்து இந்திக்கு செல்கிறார்.

மங்களூர் பெண்...
ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்ட பூஜா மங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழில் அறிமுகமான பூஜா தற்போது ‘ஒக்க லைலா கோசம், முகுந்தா ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்...
விளம்பரங்களிலும் தலை காட்டிய பூஜாவுக்கு பாலிவுட் வெல்கம் சொல்லியுள்ளது. முதல்படத்திலேயே ஹிரித்திக் ரோஷன் ஜோடியாகிறார்.

ஹிரித்திக் படம்...
ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் புதிய படமான மொகஞ்சதாரோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா.

அந்தக் காலத்துக் காதல்...
புராதணக் காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் பூஜாவின் உடையை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட ஹாலிவுட்டின் ஏப்ரல் பெர்ரி வடிவமைக்க உள்ளாராம். இத்தகவலை தனது சமூகவலை தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பூஜா.

கனவு மெய்ப்பட்டது...
அதில், இந்தப்பட வாய்ப்பின் மூலம் தனது பாலிவுட் கனவு மெய்ப்பட உள்ளதாகவும், தான் இந்தப்படத்தில் நடிப்பது குறித்து மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் பூஜா கூறியுள்ளார். மேலும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் வடிவமைக்க உள்ள ஆடையை அணியப் போவதை நினைத்தால் மிகவும் த்ரில்லிங்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூஜா சாதிப்பாரா...
இவரைப் போலவே சர்வதேச அளவில் கலக்கி வரும் ஷில்பா ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயும் மங்களூரில் இருந்து சென்றவர்கள் தான். அவர்களைப் போலவே பூஜா ஹெக்டேயும் சாதிப்பார் என்ற நம்பிக்கையில் கர்நாடகா காத்துக் கொண்டிருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications