தை அமாவாசை: ராமேஸ்வரம், வேதாரண்யத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் தை,ஆடி அமாவாசை நாள்களில் புனித நீராடும் மக்கள்,தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.
ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாளில் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. இதில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீர்நிலைகளில் புனித நீராட திரளான மக்கள் குவிந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில்…
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடுகின்றனர்.
தை அமாவாசை தினமான இன்று இந்தியாமுழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

புனித தீர்த்தங்களில்…
தைஅமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித ஸ்தலங்களான திருப்புல்லாணி, தேவி பட்டினம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் இறைவனை வழிபட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப் பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரியில்
இதேபோல் முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர்.

திருச்செந்தூரில் நீராடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

வேதாரண்யத்தில்…
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு எள்ளும், அரிசியும் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.

குற்றாலத்தில்…
குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குறைவாக விழும் தண்ணீரில் குளித்து முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் செய்து வழிபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications