For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடையின் உச்சம்: 2 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுதாம்-வானிலை மையம் வார்னிங்

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களான மதுரை, வேலூா் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோடையின் உச்சக்கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்ற செய்தி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 Hot day express across tamilnadu

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது என்றும், தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியில் அதிகபட்சமாக 111 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீச உள்ளதால், வேலூா், சேலம், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வாலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுடன், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என ஆய்வு மையம் ஆறுதல் செய்தியை அளித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் திருவள்ளுர், திருச்சி, வேலூர், சேலம், பரமத்தி, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
According to the Meteorological Survey, the Telangana State has received a maximum temperature of 111 degrees Celsius in Adilabad. Vellu, Salem, Tiruchirapalli, Dharmapuri, 8 districts in the next two days, the impact of the sun is rising, and the sky in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X