மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிப்பு.. வாடகை வீட்டில் இருந்து திரும்பும் சொந்த வீட்டுக்காரர்கள்
மவுலிவாக்கத்தில் 11 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தை இடித்ததையடுத்து, காலி செய்து கொண்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்ற சொந்த வீட்டுக்காரர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
சென்னை: எப்போது வேண்டுமானாலும் 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த சொந்த வீட்டுக்காரர்கள் காலி செய்து கொண்டு பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு பிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆபத்தான கட்டடம் நேற்று இடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்ப வரத் தொடங்கி உள்ளனர்.
சென்னையை அடுத்து மவுலிவாக்கத்தில் 11 அடுக்குகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த இரண்டு கட்டடங்களும் கட்டி முடிப்பதற்குள் 2014ம் ஆண்டு ஒரு கட்டடம் தானாகவே திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற கணக்கு தெரிவதற்கு முன்பே அவசர அவசரமாக இடிபாடுகள் அகற்றப்படாமல் மூடப்பட்டன.

இதனையடுத்து, நன்றாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடம் இப்படி திடீரென இடிந்து விழுந்ததில், அதன் அருகில் வசித்த வந்த சொந்த வீட்டுக்காரர்கள் அச்சமடைந்தனர். பக்கத்திலேயே இருக்கும் இன்னொரு கட்டடமும் எப்போது விழுமோ என்று அன்றாடம் பயந்து பயந்து வாழ்ந்து வந்தனர். இதனால் பல சொந்த வீட்டுக்காரர்கள் வீட்டை காலி செய்து கொண்டு பல்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், கட்டட இடிபாடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட், ஆபத்தான நிலையில் எப்போது விழுமோ என்று நின்று கொண்டிருந்த இன்னொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, நேற்று மாலை நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொண்டனர். மேலும், காலி செய்து கொண்டு வேறு இடங்களுக்கு சென்றவர்கள் ஒவ்வொருவராக தங்களது சொந்த வீட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த வீட்டிற்கு திரும்புவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications