வெள்ளப் பெருக்கெடுத்த அமராவதி.. வீடுகள், வயல்களுக்குள் நீர் புகுந்து மக்கள் அவதி!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அமராவதி ஆற்றில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதி, மற்றும் வயல் வெளிகளிலும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தொடா்மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பல அணைகளின் உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் உரிய வௌ்ள தடுப்பு நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சீறிப் பாயும் அமராவதி

சீறிப் பாயும் அமராவதி

இந்த தண்ணீர் கரூர் அமராவதி ஆற்றில் சீறப்பாய்ந்து செல்கிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் வௌ்ளப்பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையினா், வருவாய்துறையினா். மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தி தொடா்கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அலட்சியமாக இருந்ததால் வந்த வினை

அலட்சியமாக இருந்ததால் வந்த வினை

இருந்தபோதிலும் அதிகாரிகள் வௌ்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் தற்போது அமாரவதி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் 37ஆயிரம் கனஅடி தண்ணீர் கிளை வாய்காலான ராஜவாய்க்கால் மூலம் வெளியேறிய வௌ்ளநீர் கருப்பம்பாளையம் ஊராட்சி, சுக்காலியூர், அருகம்பாளையம், தான்தோன்றிமலை குடியிருப்பு காலணி, சவரிமுத்து தெரு, பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மட்டுமின்றி வயல்வெளிகளிலும் வௌ்ளம் புகுந்தது.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமராவதி ஆற்றிலிருந்து ராஜவாய்க்காலுக்கு செல்லும் வடிகால் தூர் வாரி சீரமைக்காத காரணத்தால் வௌ்ள நீர் ஊருக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

வயல்களிலும் புகுந்தது

வயல்களிலும் புகுந்தது

மேலும், சணப்பிரட்டி, மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கா் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வரத்துவாரிகள், குளங்கள் தூர் வாரப்படாததால் மழைநீர் சேமிக்கப்படமல் உள்ளது.

பயன்படாமல் வீணாகிப் போன அவலம்

பயன்படாமல் வீணாகிப் போன அவலம்

இதனால் மழை வௌ்ளநீர் விவசாயத்திற்கு மட்டுமல்லாது, குடிநீருக்கும் பயன்படாமல் உள்ளது. நிலத்தடி நீரும் சேமிக்க வழியில்லாமல் போய் உள்ளது என்று குற்றம் சாட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+