டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல்
தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் 9 மாதங்களாக வெளியாகமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே குரூப்-4 தேர்வு முடிவுகள குறித்து சர்ச்சை எழுந்தது. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதே போல் குரூப் 4 தேர்வில் ஒரே குறிப்பிட்ட மையத்தில் இருந்து மட்டும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. தென்காசி மற்றும் காரைக்குடி பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
2500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில், 600க்கும் மேல் தென்காசி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்க வெளியாகி உள்ளது. குறிப்பாக 450 பேர் சங்கர் கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications