இருப்பவர்களை விட இல்லாதவர்களுக்கே அருமை தெரியும் என்பார்கள்... சுந்தரத்துக்கு அது தெரியாதது ஏனோ?
Recommended Video

சென்னை: குழந்தை இல்லாத நிலையிலும் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி இரு குழந்தைகளை கொலை செய்ய சொல்ல சுந்தரத்துக்கு எப்படி மனம் வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார். இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை பிடித்த போலீஸார் அவரை வைத்தே அபிராமியை பிடிக்க திட்டமிட்டனர்.

பிரியாணி கடையில் பணி
அதன்படி, கள்ளக்காதலன் சுந்தரம் மூலமாக நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்தனர். இந்த விவகாரத்தில் கள்ளக்காதலன் சுந்தரம் என்பவர் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடையில் பணியாற்றுகிறார். அங்கு பிரியாணி சாப்பிட வந்த போதுதான் அபிராமிக்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

மாபாதகம்
இரு மாதங்கள் நெருக்கத்தை விட மனமில்லாமல் தவித்த அபிராமிக்கு , கணவரையும் குழந்தைகளையும் கொல்லுமாறு ஐடியா கொடுத்ததோடு மட்டுமல்லாமல் விஷத்தையும் வாங்கி சுந்தரம் மாபாதகத்தை செய்துள்ளார்.

குழந்தை
சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்களுக்கு எந்த குழந்தையை பார்த்தாலும் ஏக்கம் வந்துவிடும். அதை தன் குழந்தையாக பாவிக்க தொடங்குவர். குழந்தை பாக்கியம் இருக்கும் அபிராமியை காட்டிலும் குழந்தை இல்லாத சுந்தரத்துக்குதான் அதன் அருமைகள் தெரியவேண்டும்.

எப்படி மனம் வந்தது
ஆனால் இந்த விஷயத்தில் கொஞ்சமும் இரக்கமின்றி பால் மனம் மாறாத பிஞ்சுக் குழந்தைகளை எப்படிதான் கொல்ல மனம் வந்ததோ. அபிராமியை மனைவியாக நினைக்கும்போது அவரது குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்து உடன் அழைத்து வர சொல்லாமல் கொல்ல சொல்ல எப்படி மனம் வந்தது.

ஆச்சரியம் இல்லை
இன்று குழந்தைகளை கொல்ல துணிந்த சுந்தரம் நாளை வேறு பெண்ணுக்காக அபிராமியை கொலை செய்யவும் தயங்கியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? பாலூட்டி சீராட்டி வளர்த்த குழந்தைகளை கொல்ல அபிராமிக்கே மனம் வந்தபோது சுந்தரத்துக்கு வருவதில் ஆச்சரியம் இல்லை என்கிறீர்களா அதுவும் சரிதான்.












Click it and Unblock the Notifications