'பெரிய அய்யாவை' இப்படித்தான் சமாதானம் செய்தாராமே 'சின்ன அய்யா'!
சென்னை: தேமுதிகவுடன் இணைவது தொடர்பாகவும், விஜயகாந்த்துடன் மேடையில் ஏறுவது தொடர்பாகவும் கடும் கோபத்துடனும், அதிருப்தியுடனும் இருந்து வந்த டாக்டர் ராமதாஸை, அவரது மகன் டாக்டர் அன்புமணிதான் கஷ்டப்பட்டு சமாதானம் செய்தாராம்.
கோபத்துடன் இருந்த தனது தந்தையிடம், தனது மகள்களை பேச விட்டும், பேத்திகளின் முகத்தைப் பார்க்க வைத்தும்தான் சமாதானப்படுத்தினாராம் அன்புமணி.
மனைவி, குழந்தைகளுடன் தன் முன்பு மகன் வந்து நின்றதைப் பார்த்த டாக்டர் ராமதாஸ், அதற்கு மேலும் கோபத்தைக் காட்ட மனம் இல்லாமல் குளிர்ந்து இறங்கி வந்து விட்டாராம்.

பிடிக்காத கூட்டணி
பாஜக கூட்டணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்பாத நிலையில், அக் கூட்டணி எதிர்பாராத விதமாக அமைந்துவிட்டது.

தமிழருவி மணியனின் முயற்சி
தமிழகத்தில் திமுக, அதிமுக வுக்கு மாற்று அணி அமைத்தே தீருவது என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் களம் கண்டார். இவரது அணுகுமுறைக்கு தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு பெரும் கட்சிகளும் பல்வேறு காரணங்களுக்காக முரண்டு பிடித்து பின்பு கூட்டணியில் இணைந்தது.

அன்புமணியின் நிர்ப்பந்தம்
இந்த நிலையில், பாமக வேட்பாளர்களை ஏற்னவே டாக்டர் ராமதாஸ் அறிவித்து வாக்கு சேகரித்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாமக இளைஞரணி செயலாளரும், டாக்டர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ரமதாஸ் நிர்பந்தம் செய்ததால்தான் அந்தக் கூட்டணிக்குள் பாமக நுழைந்ததாம்.

மேடையேற முன்வரவில்லை
இருப்பினும் இந்தக் கூட்டணியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், ராஜ்நாத் சிங் வந்த போது கூட, மேடை ஏறவில்லை. அவருக்கு பதில் அவரது மகன் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் தான் மேடை ஏறினார்.

மகன் மீது கோபம்
தன்னையும் மீறி தனது மகன் கிடைத்த சீட்டுகளைப் பெற்று பாஜக கூட்டணியில் தீவிரம் காட்டியதால், டாக்டர் ராமதஸ் அன்புமணி மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

மனைவி, மகள்களுடன் விரைந்த அன்புமணி
இந்த தகவல் அன்புமணி காதுக்கு வரவே, அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சகிதம் டாக்டர் ராமதாஸை சமாதானம் செய்ய, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

பேத்திகளைப் பார்த்ததும்
அன்புமணி ராமதாஸ் வரும் தகவல் ராமதாஸ் காதுக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் மேலும் கோபம் ஆனாராம். ஆனால், அவர் தனது பேத்திகளை கண்டதும் மிகவும் குளிர்ந்து போனாராம்.

உட்கார வைத்து கவலையுடன் அறிவுரை
மேலும், அன்புமணிடம் எதிர்கால அரசியல் குறித்தும், தனது கவலைகள் சில குறித்தும் பேசினாராம். மேலும், தேர்தல் பிரசாரம் குறித்தும் பேசினார்களாம்.

காணாமல் போன மன வருத்தம்
எது எப்படியோ எங்க பெரிய அய்யா.. சின்ன அய்யா இடையே கூட்டணி விவகாரத்தில் சிறிது இடைவெளி இருந்தது. அது இப்போது மறைந்துவிட்டது என உற்சாகம் பொங்க சொல்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications