கேவலமான அரசு நிர்வாகத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
சென்னை: மக்கள் உண்மையில் பாவம்.. அதிலும் தமிழக மக்கள் மிக மிகப் பாவம்.. இந்த சாலையைப் பாருங்கள். இந்த சாலையில் நடந்து செல்லும், வாகனத்தில் செல்லும் மக்கள் படும் பாட்டை எழுதிச் சொல்லத் தேவையில்லை.
இது ஒரு துளிதான். இப்படிப்பட்ட சாலைகளை தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பார்க்கலாம். மோசமான நகர நிர்வாகத்திற்கு, இந்த சாலை மிகச் சரியான உதாரணம்.

இந்த மகா மோசமான சாலை இருப்பது, சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயிலில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மெயின் ரோட்டில்தான்.
இப்படி ஒரு கேவலமான சாலையைப் பார்த்தும் பார்க்காமல் இருக்கும் நகர நிர்வாகம் சோறு சாப்பிடுகிறதா அல்லது வேறு எதையும் சாப்பிடுகிறதா என்று தெரியவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது சாலை வசதி. அதைக் கூட சரி செய்ய முடியாமல் ஒரு நிர்வாகம் இருக்கிறது என்றால் அதை விட கேவலமானது எதுவும் இருக்க முடியாது.

இந்த சாலையில் கர்ப்பிணிகளால் பத்திரமாக போய் வர முடியுமா.. முதியவர்கள் பத்திரமாக நடந்து போய் பாதுகாப்பாக திரும்ப முடியும்.. பள்ளிக் குழந்தைகள் எப்படி போய் வர முடியும்..
மழை பெய்தால் சாலை பாதிப்படையும்.. வாஸ்தவம்தான்.. ஆனால் இவ்வளவு பெரிய குழி விழுந்த பின்னரும் கூட அதில் எதையாவது போட்டு குறைந்தபட்சம் ஓரளவுக்காவது சரி செய்யக் கூடவா இந்த நிர்வாகங்களுக்குத் தோன்றாது....?
பாவம் மக்கள்!
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications