விஜய்யோட வாக்காளர் ஐடி எப்படி ராஜா கைக்கு வந்துச்சு.. அப்ப ஆதார் அட்டை கதி??
Recommended Video

சென்னை: சற்று உற்றுநோக்கிப் பார்த்தால் தேசப் பாதுகாப்பு என்பதையே, தனி நபர்களின் பாதுகாப்பு என்பதையே இந்த பாஜகவினர் கேள்விக்குறியாக்கி விட்டதாகவே நமக்கு தோன்றுகிறது. விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை எச். ராஜா வெளியிட்டதன் உள் நோக்கத்தை விட அது எப்படி அவரது கைக்குப் போனது என்பதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அச்சமாகவும் கூட இருக்கிறது.
விஜய்யின் தனிப்பட்ட விஷயம் இந்த வாக்காளர் அடையாள அட்டை. இது எப்படி ராஜா கைக்கு வந்தது. அதை எப்படி வெளியிட்டார். அப்படி வெளியிடுவது இந்திய சட்டத் திட்டங்களின்படி சரியானதுதானா... அடுத்தவர் வாக்காளர் அடையாள அட்டையை இப்படி பகீரென பகிரங்கமாக பொதுவில் வெளியிடுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது. இது சட்டரீதியான செயல்தானா என்று பல கேள்விகள் குவிகின்றன.
இத்தனைக்கும் சட்டம் படித்தவர் எச். ராஜா. அவரே இப்படி அடுத்தவரின் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து அல்லது யாரிடமிருந்தாவது பெற்று பொதுவில் வெளியிட்டது எந்த வகையில் சட்டரீதியான செயல் என்பது தெரியவில்லை.

ஐடியை வெளியிட்டு தாக்குதல்
எச். ராஜாவின் அரசியல் இதுவரை இல்லாத அளவு கீழ் நோக்கிப் போய் விட்டது. நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு அவர் சார்ந்த மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறேன் என்று கூறிய அவரது செயல் பெரும் அநாகரீகமாகப் பார்க்கப்படுகிறது.

ராஜாவுக்கு ஐடி கிடைத்தது எப்படி?
இப்போது அதை விட பயங்கரமான கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு எப்படி விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. யார் அவருக்குக் கொடுத்தார்கள். அப்படியே கொடுத்தாலும் இவர் எப்படி போடலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இப்படி வெளியிடலாமா?
இதுபோல அடுத்தவரின் ஐடியை எடுத்து பொதுவில் அதுவும் கோடானு கோடி மக்கள் பார்க்கும் டிவிட்டரில் போய்ப் போடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டம் படித்தவராச்சே ராஜா.. இது கூடவா அவருக்குத் தெரியாது .. அல்லது யாரும் இவருக்கு இது தப்பாச்சே என்று எடுத்துச் சொல்லவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுவே இப்படீன்னா அப்ப ஆதார் கதி??
சரி வாக்காளர் அடையாள அட்டைக்கே இந்த கதின்னா.. நம்ம நாட்டு மக்களின் ஆதார் எண்ணை வைத்து இவர்களெல்லாம் விளையாட மாட்டார்களா என்ற அச்சமும், பீதியும், பயமும், நடுக்கமும் மக்களுக்கு எழுந்துள்ளது. சாதாரண வோட்டர் ஐடியையே திருடுகிறவர்கள் (அடுத்தவருடையதை அவருக்குத் தெரியாமல், பெர்மிஷன் இல்லாமல் திருட்டுதானே பாஸ்!) ஆதார் நம்பரை வைத்து என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற அச்சம் எழுவது இயல்புதானே.
விஜய்யின் பெயரை விடுங்க ராஜா சார், எப்படி அவருடைய ஐடி கார்டு உங்க கைக்கு வந்துச்சு.. அதைச் சொல்லுங் என்று இப்போது தமிழ்நாடே எச். ராஜாவைப் பார்த்துக் கேட்கிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications