இப்பெல்லாம் இப்படித்தான் அண்ணா சாலையில் நடக்குறாங்களாம் மக்கள்.. எப்பூடி!
அண்ணா சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்ய இந்த டெஸ்டிங்கெல்லாம் அவசியமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை போன்ற ஒரு " வீடியோ" வைரலாக பரவி வருகிறது.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் திடீர் திடீரென்று ஏற்படும் பள்ளங்களில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள கையாள வேண்டியது அவசியமாகும். நாம் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனை, எல்ஐசி , பாண்டி பஜார், சர்ச் பார்க் கான்வென்ட் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சாலை பிளந்து கொண்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்ச் பார்க் கான்வென்ட் அருகே சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன கலவை கொப்பளித்தது. இதற்கு மெட்ரோ சுரங்க பணிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்பெல்லாம் இப்படித்தான் அண்ணா சாலையில் நடக்குறாங்களாம் மக்கள்.. pic.twitter.com/BbHgh55j08
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2017
இந்த சூழலில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ஒன்று புறப்பட தயாரான போது அங்கு 10 அடி ஆழத்தில் பள்ளம் விழுந்தது. இதனால் பேருந்தும், அதன் பின்னால் வந்த காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் மீட்பு பணிகள் நிறைவடைந்து சாலைப்பணிகள செப்பனிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா சாலையில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டது. எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஒரு கலாய் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஸ்பைடர் மேன் உடை அணிந்த ஒருவர் பெரிய ஸ்பேனரால் சாலையை தட்டி தட்டி பார்த்து உறுதியாக இருக்கும் பட்சத்தில் முன்னோக்கி செல்வது போல் உள்ளது. சொல்ல முடியாது பாஸ், இந்த நிலை கண்டிப்பாக வெகுவிரைவில் ஏற்படும் போல. அந்த அளவுக்கு சாலைகள் தரமற்றவையாகவும், நவீனம் என்ற பெயரில் பாதுகாப்புகள் கடைபிடிக்கப்படாமலும் உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications