இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் வாங்களேன் பழகலாம்!
Recommended Video

சென்னை: இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் வாங்களேன் பழகலாம் என்று நினைக்க தோன்றுகிறது.
உற்ற நேரத்தில் உதவும் நண்பர்களே உண்மையான நண்பர்கள் என்பார்கள். நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்கும் நல்ல நண்பர்களுடன் பழகுவதே சிறந்தது என்றும் கூறுவதுண்டு.

நண்பருக்கு ஒரு பிரச்சினை என்றால் புரளி பேசும் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழியை சொல்லும் நல்ல நண்பர்களும் உண்டு. நம் வீட்டில் விசேஷம் என்றால் இரவு பகல் பாராமல் உணவு பரிமாறுவது, ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்ட மளிகைகளை பாதுகாப்பது போன்ற பணிகளில் மும்முரமாக இருப்பவர்களும் நண்பர்களே.
இப்படி நண்பர்களின் முக்கியத்துவத்தையே அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணம் ஆனவுடன் பெரும்பாலும் பெண்களின் நண்பர்கள் வட்டாரம் குறைந்துவிடும். அதுபோல் ஏதோ சில ஆண்களின் நட்புகளும் குறைவதுண்டு.
ஆனால் இங்கு புதுமனைவியையே ஆச்சரியப்பட வைத்து விட்டார்கள் இந்த நண்பர்கள். ஒரு நண்பனின் திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் நண்பருக்கு தங்க செயினையும் மோதிரத்தையும் பரிசாக அளித்துள்ளனர். பார்த்தால் கேரள மாநிலத்தவரின் திருமணம் போன்றுள்ளது.
வரிசையாக வந்து வாழ்த்தும் நண்பர்கள் புது மாப்பிள்ளைக்கு செயினாக போட்டு கொண்டே வருவதை பார்த்த புதுப்பெண் ஆச்சரியப்படுகிறார். மொத்தம் 9 தங்க சங்கிலிகளும், இரு தங்க மோதிரங்களும் இதனிடையே சிலர் பெரிய பெரிய பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட கிப்ட்களையும் வழங்கினர்.
இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் வாங்களேன் பழகலாம்.


Click it and Unblock the Notifications
