Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்த்தை ஜாலமா? வளர்ச்சியா? 2024- 25 பட்ஜெட் எப்படி? - ஆனந்த் சீனிவாசன் அலசல்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

வழக்கமாகத் தேர்தல் காலங்களை ஒட்டி வெளியாகும் பட்ஜெட்டுகளில் வாக்குகளைக் கவரும் கவர்ச்சி அறிவிப்புகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்படி இந்த பட்ஜெட்டில் ஒரு விசயம் கூட இல்லை.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பார்கள் என்று பல அரசு அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான அறிவிப்பு ஒன்றும் வெளியாகவில்லை. அதைவிட்டு மக்கள் நலம் சார்ந்த பல விசயங்களுக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

இந்த பட்ஜெட் 'ஏழு இலக்குகளைக் கொண்டுள்ளது' என்று பட்டியல் போட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். கூடவே, 'நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு' என்றும் கூறி இருந்தார்.

ஆனால், இதற்கு மாறாக 'இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம்தான் உள்ளது. வளர்ச்சி ஒன்றும் இல்லை' என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

இந்த மாநில பட்ஜெட்டின் 'பவர்' என்ன? அதைப்பற்றி பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசனிடம் கேட்டோம். அவர் வழக்கமான அவரது ஸ்டைலில் பொளந்து கட்டினார்.

"மத்திய பட்ஜெட் என்பது வேறு. மத்திய அரசு பட்ஜெட்டிற்கு வருமானமும் போடலாம். செலவுக்கணக்கும் போடலாம். ஆனால், மாநில பட்ஜெட் என்பதில் வருமானம் என்பது மிகக் குறைவு. அதுவும் ஜிஎஸ்டி என்பது அறிமுகமானதற்குப் பிறகு மாநில அரசின் வருமானம் என்பது குறைந்துவிட்டது.

இன்னொரு பக்கம் செஸ் என்று ஒன்றின் மூலம் வரலாறு காணாத அளவுக்கு வரிபோடுகிறார்கள். மத்திய பட்ஜெட் போடுவதற்கு இரண்டு நாள் முன்னால் தங்கத்திற்கு Agriculture infrastructure cess என்று ஒரு வரியைக் கொண்டுவந்து 5% வரியைப் போட்டார்கள்.

சிஏஜி அறிக்கையே என்ன சொல்கிறது என்றால், அரசாங்கம் அந்த cess வரியை Agriculture பயன்படுத்தாமல் வேறு எதற்கோ அந்த நிதியைச் செலவிடுகிறார்கள் என்றுதான் சொல்கிறது.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

இதையே நான் சொல்கிறேன் என்றால், இப்படி மத்திய அரசு cess மூலம் பிடிக்கும் வரிப்பணம் மாநில அரசுக்கு வராது. ஆக, மத்திய அரசுக்கு வரி மூலம் வருமானம் உள்ளது. மாநில அரசுக்கு வரி மூலம் பெரிய வருமானம் இல்லை என்பதை விளக்கத்தான்.

இப்படியான ஒரு பின்னணியை வைத்துத்தான் மாநில அரசின் பட்ஜெட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழ்நாடு அரசு போட்டுள்ள பட்ஜெட் ஒரு நல்ல பட்ஜெட்தான்.

ஒரு நீண்ட மரபு உள்ள அரசு என்ன செய்யும்? பணக்காரர்களுக்கு வரியைக் கூட்ட வேண்டும். ஏழைகள் வரியைக் குறைக்க வேண்டும். இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் நாம் என்ன தர முடியும் என்றுதான் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்குப் பல முயற்சிகளை மாநில அரசு எடுத்துள்ளது. பெருந்துறையில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்டப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அங்கே வரப் போகிறது.

மத்திய அரசு எய்ம்ஸ் கொண்டு வருவோம் எனச் சொல்லி அடிக்கல் நாட்டி வெறும் ஒத்தை செங்கல்தான் இதுவரை வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அது அனைவருக்கும் தெரியும். வருமானம் வரக்கூடிய மத்திய அரசு அதை இன்னும் நிறைவேற்றவில்லை.

ஆனால், மாநில அரசு தமிழ்நாட்டின் மிகவும் பின் தங்கிய பகுதியில் இப்படி ஒரு நவீன மருத்துவமனையைக் கட்ட திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

இன்றைக்குக் கோவை மருத்துவ பெரு நகரமாக உள்ளது. அதுமட்டுமே போதாது. ஆகவே, ஈரோட்டின் அருகே உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து அதைக்கட்டுவது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்.

சென்னையைச் சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏரிகளைத் தூர்வாருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மாநில அரசு பட்ஜெட்டில் சாலை வசதி என்பதில் கவனமே செலுத்த மாட்டார்கள். கிராம சாலையை முன்னேற்றவும் நகரச் சாலையை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் தனிக் கவனம் செலுத்தி உள்ளனர்.

ஐடி துறையைத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பட்ஜெட்டில் கவனம் செலுத்தி வருவது முக்கியமாக எனக்குப்படுகிறது. முன்பு மதுரையில் ஒரு ஐடி பார்க் சொன்னார்கள்.

How is the TN Budget 2024-25 ? Analysis by Anand Srinivasan

அப்புறம் திருச்சியில் தொடங்கினார்கள். அடுத்து விழுப்புரத்தில் ஆரம்பித்தார்கள். இப்போது தஞ்சாவூரில் ஒரு ஐடி பார்க் அறிவித்திருக்கிறார்கள். இது மிகமிக முக்கியமான அறிவிப்பு.

இந்த மாதிரியான ஒரு முயற்சி ஆந்திராவில் நடக்கவில்லை. தெலங்கானாவில் நடக்கவில்லை. கர்நாடகாவில் நடக்கவில்லை. தமிழ்நாடுதான் அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் வர உள்ளன. இதனால் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் மிக மிக முக்கிய அறிவிப்புகள்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+