ரஜினியின் டீ கப், டீ சர்ட், மாஸ் போஸ்டர்.. வெளியாவதற்கு முன்பே கல்லா கட்டும் காலா!
காலா படம் வெளியாவதை முன்னிட்டு அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் காலா டிசைன் பொறிக்கப்பட்ட டீ சர்ட், காபி கப், போட்டோ பிரேம்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: காலா படம் வெளியாவதை முன்னிட்டு அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் காலா டிசைன் பொறிக்கப்பட்ட டீ சர்ட், காபி கப், போட்டோ பிரேம்கள் வெளியாகி உள்ளது.
காலா படம் வெளியாகும் முன்பே நிறைய வருமானத்தை ஈட்டியுள்ளது. காலா படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ரூ 75 கோடிக்கு வாங்கியது.
இந்த நிலையில் தற்போது காலா டிசைன் பொறிக்கப்பட்ட டீ சர்ட், காபி கப், போட்டோ பிரேம்கள் வெளியாகி உள்ளது. கவர் இட் அப் என்ற நிறுவனம் காலா தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இதை வெளியிட்டுள்ளது.

படத்தின் போஸ்டர்
காலா படத்தின் போஸ்டர்களை வீட்டில் ஒட்டுவது போல நிறைய போட்டோ பிரேம்கள் செய்யப்பட்டுள்ளது. ரஜினி மழையில் நிற்கும் புகைப்படம், துப்பாக்கியால் சுடும் புகைப்படம், கோபமாக நிற்கும் புகைப்படம் எல்லாம் போட்டோ பிரேம்களாக செய்யப்பட்டுள்ளது.

போன் கவர் - டீ கப்பிலும் காலா
அதேபோல் போன் கவரும் காலா புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது. டீ கப்பிலும் காலா புகைப்படம் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர் இட் அப் நிறுவனத்தில் இணையத்தில் இந்த பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

வருமானம்
இதில் காலா டீ சர்ட்டுகள் 500 ரூபாயில் இருந்து விற்கிறது. காலா போட்டோ பிரேம்கள் 200 ரூபாயில் இருந்தும், காப்பி மக்குகள் 300 ரூபாயில் இருந்தும் விற்கிறது. போன் மாடலுக்கு ஏற்றபடி போன் கவர் விலைகள் மாறுபடுகிறது. இந்த பொருட்கள் எல்லாம் இப்போதே வைரல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியிட்டனர்
இந்த புகைப்படம், கப்புகள் வெளியிடும் விழா மிகவும் சிறிய அளவில் நடைபெற்றது. படத்தில் பணி புரிந்தவர்கள், டீசர்ட் போட்டோக்களை வடிவமைத்தவர்கள், படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரது மனைவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications