கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! போர் களமான பள்ளி வளாகம்.. திடீரென வன்முறை ஏற்பட என்ன காரணம்! பரபர தகவல்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு நடைபெற்ற போராட்டம், திடீரென வன்முறையாக மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார்.
அந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

புகார்
இருப்பினும், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அங்கு ஏற்கனவே பல்வேறு மாணவிகள் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

உடலை வாங்கவில்லை
மாணவி உயிரிழந்த 5 நாட்கள் ஆன பின்னரும் கூட, பெற்றோர் உடலை வாங்காமல் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியை மூடி, தாளாளரைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி வளாகம் முன் இன்று மக்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் வன்முறை
அந்தச் சமயத்தில் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போலீசார் வாகனத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பள்ளியின் சுவரை உடைத்து உள்ளே புகுந்தனர். பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டகார்ரகல், பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மேலும், போலீசாரில் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் சொல்வது என்ன
மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் பள்ளியில் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டதற்கு இதுவே சாட்சி என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.. மேலும், ரத்தக் கறை இருந்ததாகவும் இருப்பினும் இவை குறித்து பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தெளிவாக இல்லை என்பதால் சிபிசிஐடி விசாரணை தேவை என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

வன்முறையானது எப்படி
இதை வலியுறுத்தி முதலில் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்ற போது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே போராட்டம் வன்முறையானது. அப்போது தான், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன.

முக்கிய காரணம்
இன்று பள்ளியை நோக்கி போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது போதிய அளவில் போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்திய போதிலும், போதியளவு போலீசார் இல்லாததால், அவர்கள் மீண்டும் ஒன்றுகூடி போலீசாரையே தாக்கத் தொடங்கினர். இதன் காரணமாகவே வன்முறையை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

என்ன நடந்தது
போராட்டக்காரர்கள் முதலில் அங்கே கூடிய போது, அங்குக் குறைவான எண்ணிக்கையிலேயே போலீசார் இருந்து உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தவே முயன்று உள்ளனர். இருப்பினும், போலீசாரின் இந்த முயற்சிக்குப் போராட்டக்காரர்கள் ஒத்துழைக்கவில்லை. திடீரென வன்முறையில் ஈட்டுப்பட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் போலீசாரையே தாக்கத் தொடங்கினர்.
Recommended Video

சைலேந்திர பாபு விளக்கம்
போராட்டம் கையை மீறும் சூழல் உருவான நிலையில், இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்தார். மாணவி மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர் இதில் சிபிசிஐடி விசாரனை தேவையில்லை என்றும் வன்முறையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்கள் வன்முறைக்குத் திட்டமிட்டு வந்தது போல தெரிவதாகவும் வீடியோ காட்சியை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

நடவடிக்கை
நிலைமையைக் கட்டுப்படுத்த மேலும் 500 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். இந்த திடீர் வன்முறை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications