For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்க போகிறார்?: ஜெயக்குமார் பொளேர்

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல்ஹாசனை கேள்வி கேட்கும் ஜெயக்குமார்

    சென்னை: கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

    நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் விலகியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது.

    How Kamal could manage the country?: Jayakumar

    இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல் கட்சியில் இருந்து ராஜசேகர் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அதாவது, கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சியில் காவிரி நீரை அடகு வைத்தது திமுக தான் என்றும் ஜெயக்குமார் கூறினார். தமிழக உரிமைகளை முழுமையாக தாரைவார்த்து விட்டு தற்போது திமுகவினர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

    வன்முறை என்ற அளவுகோலை போராட்டம் தாண்டக்கூடாது, சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    English summary
    Minister Jayakumar questioned how Kamal Hassan could manage the country, when Kamal can not save 16 in the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X