காக்க வைத்து திராட்டில் விட்டு.. இது 'டொப்பி' கார்த்திக்கின் இன்னும் ஒரு நொம்பலக் கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸுக்குக் கை கொடுக்க கார்த்திக் முடிவெடுத்து அதைப் போய் ஞானதேசிகனிடமும், சிவகாமி புடை சூழ சொல்லி விட்டு வந்து விட்டார். ஆனால் அதை சொல்லி முடிப்பதற்குள்தான தலை வியர்த்து, கண் கலங்கி, தொப்பி கழன்று போய் விட்டதாம்.

அத்தனை பாடுபட்டு விட்டாராம் கார்த்தி உடன்பாட்டை சுமூகமாக எட்டிப் பிடிப்பதற்குள்.

இடையில் காங்கிரஸ் தலைமை மற்றும் மாநிலத் தலைமையுடன் மாய்ந்து மாய்ந்து பேசி ஓய்ந்து போய் விட்டாராம் கார்த்திக். காங்கிரஸுக்குக் கை கொடுப்பதறகுள் அலை அலைந்து கால்கள் தேய்ந்து போய் விட்டதாம் அலைகள் ஓய்வதில்லை நாயகனுக்கு.

திடீர் திடீர் கார்த்திக்

திடீர் திடீர் கார்த்திக்

அரசியல்வாதிகளிலேயே மிகவும் முக்கியமான வித்தியாசமான தலைவர்தான் கார்த்திக். அவர் எப்போது அரசியல்வாதியாவார், நடிகராக உலவுவார் என்பதை அவராலேயே கணிக்க முடியாது.

கணிப்புக்கு அப்பாற்பட்ட கார்த்திக்

கணிப்புக்கு அப்பாற்பட்ட கார்த்திக்

இவரது அரசியல் செல்வாக்கு என்ன என்பதும் இதுவரை யாருக்குமே தெரியவில்லை. அதைக் கண்டு கொள்ளும் வாய்ப்பையும் இதுவரை கார்த்திக் கொடுத்ததே இல்லை.

எப்பப் பார்த்தாலும் தூக்கம்...

எப்பப் பார்த்தாலும் தூக்கம்...

எப்போது பார்த்தாலும் ஏசி ரூமுக்குள்ளேய அடைந்து கிடப்பார் கார்த்திக். அவரைப் பார்ப்பது என்பது ரொம்ப ரொம்பக் கஷ்டமான வேலை. யாராக இருந்தாலும் சரி, கார்த்திக்கே நினைத்தால்தான் உண்டு.

திடீர் விழிப்புணர்வு

திடீர் விழிப்புணர்வு

ஆனால் திடீர் திடீரென அரசியல் பேசுவார் கார்த்திக். அதுவும் ஹைடெக்காக பேசுவார். அப்பத்தான் கார்த்திக்கும் இன்னும் கட்சியை வச்சிருக்காரு போலிருக்கே என்ற நினைவு அவர் உள்பட அனைவருக்குமே வரும்.

தெரித்து ஓடிய கட்சிகள்

தெரித்து ஓடிய கட்சிகள்

இடையில் கார்த்திக் நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டா, நைஸா இருக்கும் என்று திமுக, அதிமுக, பாஜக என பல கட்சிகளுக்கு நூல் விட்டுப் பார்த்தார். ஆனால் எல்லோருமே உங்க சங்காத்தமே வேண்டாம் சாமி என்று ஓடிப் போய் விட்டனர். ஆனால் கடைசியில் காங்கிரஸ் மட்டுமே கார்த்திக்கிடம் தற்போது சிக்கிக் கொண்டுள்ளது.

எத்தனை முறை கெஞ்சி..

எத்தனை முறை கெஞ்சி..

காங்கிரஸ் கட்சியிடம் கார்த்திக் வலியக்கப் போய் ஒட்டிக் கொண்டதற்குக் கூட அவருக்கு இப்போது இருக்கும் பணக் கஷ்டம்தான் என்று சொல்கிறார்கள். ரொம்பப் பரிதாபமாக அவர் பேசியதைக் கேட்டு ஒரு காங்கிரஸ் சினிமாப் புள்ளிதான், தொப்பியைப் பிடித்துக் கொண்டு போய் காங்கிரஸ் காரர்களிடம் சேர்த்து விட்டாராம்.

கலந்து செய்த கலவை நான்..

கலந்து செய்த கலவை நான்..

ஆனால் சத்தியமூர்த்தி பவனுக்குள் போனதுமே கார்த்திக்குக்குள் ஒளிந்திருந்த அந்த தெனாவெட்டு வெளியே குதித்து வந்து விட்டதாம். ஞானதேசிகனிடம் படு உதாரமாகப் பேசினாராம் கார்த்திக்.

ஏகப்பட்ட பில்டப்...

ஏகப்பட்ட பில்டப்...

ஞானதேசிகனிடம் பேசுகையில் தென் மாவட்டங்களே என்னமோ இவரது பனியனுக்குள் பயந்து போய் பதுங்கிக் கிடப்பது போல பேசியதைக் கேட்டு ஞானத்திற்கே சற்று டென்ஷனாகி விட்டதாம்.

தேனி கொடுங்க.. கூடவே டப்பும் கொடுங்க

தேனி கொடுங்க.. கூடவே டப்பும் கொடுங்க

பச்சையாகவே ஞானதேசிகனிடம் பேசினாராம் கார்த்திக். எனக்கு தனியாக பணம் தாங்க. கூடவே தேனி தொகுதியும் தாங்க. பாத்துக்கிடலாம் என்று கூலிப்படைத் தலைவர் போல அவர் பேரம் பேசியதைக் கேட்டு ஞானதேசிகன் ஜெர்க் ஆகி மேலிடத்துக்கிட்ட கேட்டுத்தான் எதையுமே செய்ய முடியும் என்று கூறி விட்டாராம்.

சரி கொடுக்காட்டி போங்க.. ஆனா காசு கொடுங்க

சரி கொடுக்காட்டி போங்க.. ஆனா காசு கொடுங்க

தேனி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கார்த்திக், உடனே ஜகா வாங்கி தேனி கொடுக்காட்டியும் பரவாயில்லை, காசு மட்டுமாச்சும் கொடுங்க என்று கேட்க ஞானத்திற்கு பிபி ஏறி விட்டதாம்.

காக்க வைத்து திராட்டில் விட்டு

காக்க வைத்து திராட்டில் விட்டு

உடனடியாக பதில் சொல்லாமல் அனுப்பி விட்டாராம் ஞானதேசிகன். இதனால் வீடு திரும்பிய கார்த்திக் நொந்து நூடூல்ஸாகி, காத்திருந்து களைப்பாகிப் போன பின்னர்தான் அழைப்பு வந்ததாம் காங்கிரஸிடமிருந்து.

இப்படித்தான் அவருக்கு சீட்டே தராமல் சீப்பாக கட்சிக்குள் இழுத்து பிரசார பீரங்கியாக்கியதாம் காங்கிரஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+