கருணாநிதி எப்படி 'கலைஞர்' ஆனார்?
திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்தவர் அப்போதைய நடிகர் எம்ஆர் ராதா.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்தவர் அப்போதைய நடிகர் எம்ஆர் ராதா.
திமுக தலைவர் கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் சமயோசித திறமையால் சிறுவயதிலேயே அப்போதே பிரகாசித்தவர் கருணாநிதி.

பல படங்களுக்கு வசனம்
அரசியல்வாதியாக மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, கவிஞர், பத்திரிக்கையாளர் என பல முகங்களை கொண்டவர் கருணாநிதி. பராசக்தி, பூம்புகார், மனோகரா உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கருணாநிதி.

மேடை நாடகங்கள்
கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான படங்கள் பெரும் ஹிட். இதனால் திரைத்துறையில் தனக்கென ஓர் முத்திரை பதித்தார் கருணாநிதி. மேடை நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதி இயக்கியவர் கருணாநிதி.

தூக்கு மேடை
அப்படி அவர் கதை வசனம் எழுதிய நாடகம்தான் தூக்கு மேடை. முற்றிலும் பகுத்தறிவு பிரச்சாரமாக அமைந்தது இந்த நாடகம். இந்த நாடகத்தில் பாண்டியன் வேடத்தில் நடித்திருந்தார் கருணாநிதி.

எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி
இந்த நாடக விளம்பரத்தில் "அறிஞர் கருணாநிதி' என்று எழுதப்பட்டிருந்தது. "அறிஞர்' பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும். அதை எடுத்தால்தான் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி
உடனே "கலைஞர் கருணாநிதி' என்று விளம்பரம் செய்தார் எம்ஆர் ராதா. இதைத்தொடர்ந்து மனோகரா படத்தில் முதல் முறையாக கலைஞர் கருணாநிதி என்று பெயர் போடப்பட்டது.

5 முறை அரியணை
13 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. 5 முறை தமிழக முதல்வராக அரியணை ஏறியவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications