தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி? விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்!!
சென்னை: தமிழகத்தில் லிங்கா படத்தின் வசூல் எவ்வளவு என்பதை, அதை வாங்கி விநியோகித்த ஒருவரை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்.
அவர் கணக்குப்படி இந்தப் படம் ரூ 140 கோடி வரை தமிழகத்தில் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது!!

மெரீனா பிக்சர்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் மூலம் திருச்சி தஞ்சாவூப் பகுதியில் லிங்கா படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லிங்கா படத்தின் வசூலில் 21 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
படத்துக்கு வரிவிலக்கு கொடுத்ததன் மூலம் இந்தத் தொகை தமிழக அரசுக்கு இழப்பாக ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள்தான் இத்தனை நாளும் லிங்கா படத்தில் எங்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறி பிச்சையெடுக்கும் போராட்டத்தை அறிவித்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஒரு படத்தின் தியேட்டர் வசூல் எவ்வளவோ, அதற்குத்தான் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது அல்லது விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் யு சான்று பெற்ற படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அப்படித்தான் அரசின் வரி விலக்குப் பெற்றது லிங்கா.
இந்த நிலையில், அந்தப் படம் வெளியானபோது குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 1000 வரை டிக்கெட் விலையை நிர்ணயித்து வசூல் செய்து பெரும் லாபம் பார்த்தனர் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.
ஆனால் படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என முதல் வாரம் முடியும் முன்பிருந்தே திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ததாக லிங்கா தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார்.
இப்போது லிங்கா நஷ்டப் பிரச்சினை, பிச்சையெடுப்பது போன்றவற்றை விட்டுவிட்ட லிங்கா விநியோகஸ்தர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, லிங்காவுக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கை ரத்து செய்துவிட்டு, பட வசூலில் ரூ 21 கோடியை வரியாக வசூலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஒரு படம் ரூ 21 கோடியை கேளிக்கை வரியாகச் செலுத்த வேண்டும் என்றால் அதன் உண்மையான வசூல் எவ்வளவு என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்கள் சொல்வதுபடி கணக்கிட்டுப் பார்த்தால்..
தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் படி புதிய படங்களுக்கு 15 சதவீதம் வரை வசூலிக்கலாம். ரஜினியின் லிங்கா படம் ரூ 140 கோடி வசூலித்திருந்தால் மட்டுமே, அதில் 15 சதவீதமான ரூ 21 கோடியை வரியாகக் கட்ட முடியும்.
'ஒருவேளை ரஜினி படம் என்பதால் அதிகபட்ச கேளிக்கை வரி'யாக 30 சதவீதம் விதியுங்கள் என இந்த விநியோகஸ்தர்கள் புது வழக்கு தொடர்ந்தால்கூட படத்தின் மொத்த வசூல் ரூ 90 கோடிக்கு மேல் என வருகிறது!
அப்படியானால் தமிழகத்தில் லிங்கா வசூல் எவ்வளவு?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications