எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும்? என்ன சொல்கிறது இந்திய வானிலை மையம்?
எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video

டெல்லி: எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரண்டாவது நாளாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எப்படி இருக்கும்?
இந்நிலையில் எந்தெந்த நாளில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதியான இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[கடலூர் அருகே நடுக் கடலில் 30 மீனவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்! ]

அக்டோபர் 6 ஆம் தேதி
அக்டோபர் 6ஆம் தேதியான நாளை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு மத்திய அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி
அக்டோபர் 7ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தமிழகம் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அன்றைய நாளில்தான் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளில் மீனவர்கள் அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி
அக்டோபர் 8ஆம் தேதியான வரும் திங்கள் கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளும் மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி
அக்டோபர் 9ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கர்நாடகாவின் கலோர பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும். அக்டோபர் 9 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications