அம்பானியின் தொடரும் வேட்டை: ஈடிவி, சிஎன்என்-ஐபிஎன்-ஐ தொடர்ந்து சன் டிவியையும் வாங்க திட்டம்?!
சென்னை/மும்பை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான கலாநிதி மாறன் சன் குழுமத்தையே ஒட்டு மொத்தமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளதாக தெஹல்கா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சன் டி.வி. குழும அதிபர் கலாநிதி மாறன் அவரது சகோதரர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் மாதம் விசாரணை நடைபெற உள்ளது.

இதேபோல் தயாநிதி மாறன் மீது சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதிலும் கலாநிதி மாறனும் சன் குழுமமும் சிக்கியுள்ளது. இந்நிலையில் அண்மையின் சன் குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கை மாற்றப்பட்டது.
இந் நிலையில் சன் நெட்வொர்க் குழுமத்தையே கைமாற்றிவிடவும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களான ஈ டிவி, சி.என்.என்.-ஐ.பி.என் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இந்நிலையில் தெஹல்கா இணையதளத்தில் சன் டிவி குழுமத்தையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தான் வாங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெஹல்கா செய்தியில், சன் டி.வி. குழுமத்தை வாங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் சென்னை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ டி.வி.யைத் தொடர்ந்து சன்.டி.வி.யையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கைப்பற்றும் போது 2 மிகப் பெரிய பிராந்திய தொலைக்காட்சி குழுமங்களை தன்வசம் கொண்டதாக விஸ்வரூபமெடுத்துவிடும்.
இதன் மூலமாகக ஊடகத் துறையில் தீர்மானிக்கும் சக்தியாக, மக்களிடத்தில் கருத்துகளை திணிக்கிற சக்தியாக ரிலையன்ஸ் குழுமம் உருவெடுக்கும் என்கிறது தெஹல்கா.
ஆனால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications