மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை நினைத்து கவலையா?: பேடிஎம்மை பயன்படுத்த கத்துக்கோங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேடிஎம் வாலெட் என்று டிவி, ரேடியோ, சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள். ஆனால் பேடிஎம் வாலெட் என்றால் என்ன? கையில் பணம் இல்லாத நேரத்தில் தினசரி தேவைகளுக்கு இந்த வாலெட்டை எப்படி பயன்படுத்துவது.

பட டிக்கெட், கட்டணங்கள் மற்றும் பலவற்றில் கேஷ்பேக் சலுகையை ஒன்இந்தியா கூப்பன்கள் மூலம் பெறலாம். சலுகைகளை பெற கிளிக் செய்யவும்.

How Should Anyone Use Paytm Wallet for There Bill Payments, Cash Transfers & More

பேடிஎம் வாலெட்டுகள் எத்தனை வகை?

மினிமம் கேஒய்சி வாலெட்

இந்த வாலெட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போன் எண் மற்றும் இமெயில் ஐடி மூலம் வெரிஃபை செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் இந்த வாலெட்டுக்கு ரூ.10 ஆயிரம் போட முடியும்.

ஃபுல் கேஒய்சி வாலெட்

ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ள கேஒய்சி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அளித்து உங்களின் வாலெட்டை ஃபுல் கேஒய்சி வாலெட்டாக மாற்றலாம். வாடிக்கையாளர்கள் இந்த வகை வாலெட்டில் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம். ஃபுல் கேஒய்சி வாலெட் வாடிக்கையாளர்கள் பிற பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.25 ஆயிரம் வரை அனுப்பலாம்.

பேடிஎம் வாலெட்டில் பணத்தை போடுவது எப்படி?

உங்களின் பேடிஎம் கணக்கில் லாகின் செய்யவும். நீங்கள் வாலெட்டில் போட விரும்பும் தொகையை டைப் செய்து ஆட் மணி பட்டனை கிளிக் செய்யவும்.

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது வேறு எந்த வழியில் பணத்தை போடுவது என்பதை தேர்வு செய்யவும்

சிவிவி மற்றும் ஓடிபி கொடுத்தவுடன் உங்களின் பேடிஎம் வாலெட்டிற்கு பணம் வந்துவிடும்

வாலெட்டில் உள்ள பணத்தை வைத்து ஷாப்பிங் செய்யலாம், பில் கட்டலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்

பேடிஎம் வாலெட்டில் இருந்து வங்கி கணக்கு எப்படி பண பரிவர்த்தனை செய்வது?

இந்த வசதி தற்போது பேடிஎம் ஆப்பில் மட்டுமே உள்ளது பேடிஎம்.காமில் இல்லை
பேடிஎம் ஆப்புக்கு செல்லவும், 'Pay or Send' என்று இருக்கும் ஐகானை தட்டவும், பேங்க் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றுடன் நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையையும் குறிப்பிடவும் பணம் அனுப்பும் காரணத்தையும் குறிப்பிடலாம்

பேடிஎம் வாலெட்டில் இருந்து செல்போன் எண்ணுக்கு எப்படி பணம் அனுப்புவது?

பேடிஎம் ஆப்புக்கு செல்லவும், 'Pay or Send' என்று இருக்கும் ஐகானை தட்டவும், மொபைல் நம்பர் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் செல்போன் எண் மற்றும் தொகையை குறிப்பிடவும்
அனுப்புக(send) என்ற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்
அவர்களுக்கு பணம் சென்றவுடன் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் உங்களுக்கு அது உறுதி செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+