மாரடைப்பும் இல்லை: குற்றவியல் நோக்கமும் இல்லை: அப்ப ஸ்ரீதேவிக்கு என்னதான் ஆச்சு?
ஸ்ரீதேவிக்கு மாரடைப்பும் இல்லை என்றால் அவர் எப்படி இறந்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஸ்ரீதேவிக்கு மாரடைப்பும் இல்லை, குற்றவியல் நோக்கமும் இல்லை என்றால் அவர் எப்படி இறந்திருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அது குறித்து விவரங்கள் இன்று துபாய் நாட்டின் செய்தி நிறுவனமான கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதற்கான காரணத்தை விளக்கியது.

மாரடைப்பு இல்லை
அந்த அறிக்கையில் ஸ்ரீதேவி பாத்டப் எனப்படும் சொகுசு குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதார். அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. குற்றவியல் நோக்கமும் இல்லை. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறப்பு சான்றிதழ்
உடல்நலத்தில் அக்கறை கொண்டிருந்த ஸ்ரீதேவி அதிக அளவு குடித்திருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது இறப்பு சான்றிதழிலும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆழமில்லாத தொட்டி
மாரடைப்பும் ஏற்படவில்லை எனில் அவர் எப்படிதான் உயிரிழந்திருப்பார் என கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. பாத் டப் எனப்படுவது அந்த அளவுக்கு ஆழமில்லாத ஒரு குளியல் தொட்டியாகும்.

வாய்ப்பில்லை
இதில் நிலைத்தடுமாறி விழுந்தாலும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு குடித்திருப்பாரா என்பது சந்தேகமே. மேலும் இரவு விருந்துக்கு செல்லவிருந்ததால் அதிக குடிக்கு வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.

பாத்டப்பில் விழுந்து...
பாத் டப்பில் தண்ணீரும் எப்போதும் நிரப்பப்பட்டிருக்காது. அப்படியிருக்கையில் பாத்ரூம் சென்ற ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டபோது நிலைத்தடுமாறி பாத்டப்பில் விழுந்து கைதவறி தண்ணீரை திறந்துவிட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இவரது இறப்புக்கான காரணம் புரிந்தும் புரியாத மாதிரியே உள்ளது.












Click it and Unblock the Notifications