பொங்கல் பரிசு ரூ.1000.. ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் எப்படி வாங்குவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு வரும் 9ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுடன் ரூ.1000 பணமும் வழங்கப்பட உள்ளது. இதை ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசி அட்டை வைத்துள்ள வைத்துள்ள அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

இத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் துவங்கி வைத்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு காரணமாக பொதுமக்களுக்கு வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.

நான்கு நாட்கள்

நான்கு நாட்கள்

கடந்த டிசம்பர் 20ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கார்டுகளில் வரிசை நம்பர் படி வழங்கப்பட உள்ளது.

அட்டவணை

அட்டவணை

எந்தெந்த தெருக்களில் உள்ளவர்களுக்கு என்றைக்கு வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே ரேஷன்கடையில் அட்டவணையாக ஒட்ட வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுக்கப்படும்

தடுக்கப்படும்

இதன் மூலம் ஒரே நாளில் பலரும் சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவது தடுக்கப்படும். பாங்கல் பரிசு தொகையை மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக வாங்கிக்செல்ல முடியும்.

எப்படி வாங்குவது

எப்படி வாங்குவது

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொங்கல் பரிசினை பெற முடியும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (‘பாஸ்வேர்டு') வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க முடியும்.

எஸ்எம்எஸ் வரும்

எஸ்எம்எஸ் வரும்

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டவுடன், பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) உடனடியாக அனுப்பப்படும். இதனால், யாரும் ஏமாற்றவோ, ஏமாறவோ முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+