இந்த மாதம் இபி பில் கட்ட போறீங்களா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.. அரசின் முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த மாதமோ இல்லை வரும் மாதங்களிலோ நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் பின்வரும் விவரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

அந்த வகையில் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகிறது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு.

How to pay EB bill online easily with quick pay method and What you should know about it?

ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம்.ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும்.

நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

How to pay EB bill online easily with quick pay method and What you should know about it?

கட்டணம்:இந்த நிலையில்தான் இந்த மாதமோ இல்லை வரும் மாதங்களிலோ நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் பின்வரும் விவரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் பின்வரும் முறைகளை பின் பற்ற வேண்டும்.

படி 1 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login?locale=en என்ற பக்கத்திற்கு செல் வேண்டும்.

படி 2 - உங்களுக்கு லாக் இன் இருந்தால் இந்த பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும்.

படி 3 - இல்லையென்றால் இதில் உள்ள quick pay என்ற வசதியை பயன்படுத்த முடியும்.

படி 4 - அதில் உங்கள் கஸ்டமர் ஐடியை கொடுக்க வேண்டும். உங்களின் 2 இலக்க மண்டல எண் மற்றும் 9 இலக்க கஸ்டமர் எண்ணை கொடுக்க வேண்டும். கஸ்டமர் எண் உங்கள் மின் அட்டையில் இருக்கும்.

உங்கள் மண்டல எண் என்பது நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை பொறுத்தது. அதை பின்வரும் பட்டியலில் தெரிந்து கொள்ள முடியும்.

How to pay EB bill online easily with quick pay method and What you should know about it?

01 சென்னை வடக்கு:திருவொற்றியூர், மணலி, மாதவரம், தொண்டீர்பேட்டை, ராயபுரம், திரு-வி-க-நகர், தேனாம்பேட்டை, அம்பத்தூர் மண்டலங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி.

02 விழுப்புரம்:கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம்

03 கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி

04 ஈரோடு:ஈரோடு, நாமக்கல், சேலம்

05 மதுரை:மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி

06 திருச்சி:அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி

07 திருநெல்வேலி:கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்

08 வேலூர்:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி

09 சென்னை தெற்கு:அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டம்

படி 5 - இந்த 2 இலக்க எண் அதன்பின் உங்க கஸ்டமர் எண்ணை கொடுத்து அதில் உள்ள captcha எண்ணை கொடுக்க வேண்டும்.

படி 6 - அடுத்த பக்கத்தில் உங்க பில் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

படி 7 - கடைசி பக்கத்தில் பல வங்கி பரிவர்த்தனை வழிகள் இருக்கும். இதில் நீங்க வங்கி கணக்கு வைத்துள்ள நெட் பேங்கிங்,யுபிஐ அது கார்ட் பேமெண்ட் முறைகளை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+