ஹம் கோ மன் கி சக்தி தேனா... 26/11 தாக்குதலில் பலியானவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சமர்ப்பணம்
சென்னை: கடந்த 26/11 மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் "ஹம் கோ மன் கி சக்தி தேனா" என்ற பாடியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் ரயில் நிலையம், ஓட்டல் உள்ளிட்ட 3 முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் சுட்டு கொல்லப்பட்டனர். நீண்ட விசாரணைக்கு பின்பு கசாப்பும் தூக்கில் இடப்பட்டு மரண தண்டனை நிறைவேறப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான்...
இந்நிலையில் கடந்த 26ம் தேதி மும்பை தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் 26/11 மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாடல் ஒன்றைப் பாடி, அதனைத் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வசந்த் தேசாய் இசை...
பிரபல பாடலாசிரியர் குல்சார் எழுதிய இந்த பாடலுக்கு வசந்த் தேசாய் இசையமைத்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
அர்ப்பணிப்பு...
இந்த பாடலை மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் பயங்கரவாத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாணி ஜெயராம் பாடியது...
இந்தப் பாடலானது கடந்த 1971ம் ஆண்டு ஹுட்டி என்ற இந்திப் படத்தில் இடம் பெற்றதாகும். இதனை வாணி ஜெயராம் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
