நடிகர் நெப்போலியன் தலைமையில் பாஜகவில் இணைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர்
சென்னை: நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
வட சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமையில் அவர்கள் இணைந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரான நெப்போலியன் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திமுகவிலிருந்து விலகி, பாஜக தலைவர் அமிதா ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த பிறகு, தமிழகத்தில் அக்கட்சியை வலுவாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார். தனது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் வரவழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தன் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவில் இணைய வைத்தார். அத்துடன் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களை உடனடியாகச் சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.
ஆயிரக்கணக்கான பிற கட்சித் தொண்டர்கள் நெப்போலியனைச் சந்தித்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பெண் தொண்டர்கள் நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் இணைச் செயலருமான நிர்மலா வெங்கடேசன் தலைமையில் அவர்கள் இன்று கட்சியில் இணைந்தனர்.

இவர்களைத் தவிர சென்னை முகப்பேர் 89வது வட்ட திமுக அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 25 திமுக தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை பேச்சாளர் கவிஞர் பூவை ரவி பாரதியும் நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பாஜக பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, மாநில அமைப்பு சாரா அணி தலைவர் எம்என் ராஜா, வட சென்னை மாவட்டத் தலைவர் ஆர் பிரகா், வட சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ் செல்வநாதன், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications