குடும்பத் தகராறு.. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ராணுவ அதிகாரி கைது
சென்னை: தாம்பரம் சேலையூரில் குடும்ப தகராறில் மீரா என்பவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ அதிகாரி ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(42). இவர் ராணுவத்தில் கர்னலாக நாகாலாந்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மீரா(36). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி, மகள்களை பார்க்க ரங்கநாதன் விடுமுறையில் சேலையூர் வந்தார். அன்று முதல் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மீரா நேற்று முன்தினம் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மீராவின் தந்தை சுந்தர்ராஜன், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மீரா வீட்டில் விசாரணை செய்த போலீசார் தற்கொலைக்கு முன்பு மீரா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். தொடர்ந்து மனைவியை தற்கொலை செய்ய தூண்டியதாக ராணுவ அதிகாரி ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications