வரதட்சணைக்காக கர்ப்பிணிப்பெண்ணை அடித்து கொன்ற கணவர் மாமியார்
சேலம்: கர்ப்பம் தரித்திரிந்த புதுமணப்பெண்ணான இளம் பெண் ஒருவரை தாலி கட்டிய கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமை படுத்தி கொன்ற சம்பவம் அங்கு நெஞ்சை பதற வைத்துள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பக்கமுள்ள இராசிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நடராஜ் . இவருக்கும், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சுகுணா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கருவுற்று இருந்த சுகுணா நேற்று திடீர் என்று அவரது கணவர் வீட்டில் சுகுணா இறந்து விட்டதாக சுகுணாவின் தந்தை முத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மகளின் உடலை போய் பார்த்த முத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மகுடஞ்சாவடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது கணவர் நடராஜ், மாமியார் காவேரி, மாமனார் பழனிசாமி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான் தனது மகள் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது மகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்றும், அதில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுகுணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 5 மாதங்களிலே புதுப்பெண் சுகுணா மர்மமான முறையில் இறந்ததால் சங்ககிரி உதவி கலெக்டர் அரங்கநாயகி தனியாக விசாரணை நடத்தினார்.
அப்போது சுகுணாவை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுணாவின் கணவர் நடராஜ், அவரது தந்தை பழனிசாமி, தாயார் காவேரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications