உறவுக்கு கூப்பிட்டேன்.. விமலா வரவில்லை.. குறட்டை சத்தம்தான் வந்தது.. ஆத்திரமானேன்.. பதற வைத்த கணவர்

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ள கணவனிடம் விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: "உறவு கொள்ள விமலாவை கூப்பிட்டேன்.. வரவில்லை.. கொஞ்ச நேரத்தில் குறட்டை விட்டு தூங்கவும் எனக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. என்னாலும் தூங்க முடியவில்லை.. அதனால் பெரிய பாறாங்கல்லை எடுத்து விமலாவின் முகத்தில் போட்டு கொன்றுவிட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கிராமம் குடியானக்குப்பம்.. இங்கு வசித்து வருபவர் சங்கர்.. இவரது மனைவி விமலா.. இவருக்கு 31 வயதாகிறது. சங்கர் டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளி.

இவர்கள் 2 பேருமே ஏற்கனவே கல்யாணம் ஆனவர்கள்.. முதல் திருமணத்தில் இருந்து முறைப்படி விவகாரத்தும் பெற்றவர்கள்.. 5 வருடங்களுக்கு முன்புதான் விமலா - சங்கர் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மதுஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

விமலா

விமலா

எனினும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. அதனால் கோபித்து கொண்டு மகளுடன் அம்மா வீட்டில் வந்து விமலா இருந்திருக்கிறார். ஒன்றரை மாசத்தக்கு முன்புதான் சங்கர், விமலாவிடம் சமாதானம் பேசி திரும்பவும் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழைத்து சென்றுள்றார். இந்நிலையில், நேற்று காலை இவர்களது வீட்டின் கதவு ரொம்ப நேரமாகியும் திறக்கப்படவே இல்லை.. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தனர்.

சடலம்

சடலம்

அப்போது விமலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.. அவருக்கு பக்கத்தில் சங்கரும் மயங்கி கிடந்தார்.. இவர்களுக்கு அருகில் குழந்தை அழுது கொண்டிருந்தாள். இதனால் அதிர்ந்து போய் ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. விரைந்து வந்த போலீசார் விமலாவின் சடலத்தை மீட்டனர்.. சங்கரின் உடம்பிலும் நிறைய காயங்கள் இருந்தன.. அவரை உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. சிகிச்சையும் தரப்பட்டது.. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது அவர் போலீசில் தரப்பில் சொல்லப்படுவதாவது:

 குறட்டை

குறட்டை

"உறவு வைத்து கொள்ள விமலாவை சங்கர் அழைத்துள்ளார்.. ஆனால் அவர் மறுப்பு சொல்லவும், சங்கர் வற்புறுத்தி இருக்கிறார்.. அதற்கு விமலா ஒப்புக் கொள்ளவில்லை.. இதனாலேயே தகராறு வெடித்தது. ராத்திரி முழுக்க சண்டை நடந்துள்ளது.. ஒரு கட்டத்தில் சண்டை ஓய்ந்ததும் விமலா தூங்கிவிட்டார்.. ஆனால் சங்கருக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. மனைவியின் குறட்டை சத்தம் ஓவராக இருக்கவும், அவரால் தூங்கவே முடியவில்லை. விடிகாலை ஆகியும் குறட்டை சத்தம் இருந்து கொண்டே இருந்ததால் கோபம் அதிகமாகி, வீட்டுக்கு வெளியே கிடந்த பாறாங்கல்லை தூக்கி வந்து விமலா முகத்திலேயே போட்டுள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

இதில் விமலா கதறி துடித்து, அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார். இதை பார்த்ததும் சங்கருக்கு பயம் அதிகமாகிவிட்டது.. போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதே கல்லில் அவரது தலையால் வேகமாக முட்டி முட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்று, அப்படியே மயங்கி விழுந்துள்ளார்" என்றனர். இதையடுத்து சங்கரை போலீசார் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. எனினும் இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+