குழந்தையைத் தத்து கொடுத்துவிட்டு 3வது திருமணம் – மனைவியைக் குத்திக் கொன்ற 2வது கணவர்!
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 3 வயது குழந்தையை தத்து கொடுத்து விட்டு, 3 ஆவது திருமணம் செய்த பெண்ணை கத்தியால் குத்தியதாக அவரது 2 ஆவது கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் அமுதா. மின்சார ரயிலில் பழம் விற்பனை செய்து வருகிறார். இவரை முறைப்படி தாலி கட்டிய முதலாவது கணவர் உமாபதி. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக உமாபதியை விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா பிரிந்தார்.

அதன்பின்னர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரை அமுதா இரண்டாவதாக திருமணம் செய்தார். துரைராஜ், பழவேற்காடு காட்டுப்பள்ளி பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் எண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் என்பவருக்கும், அமுதாவுக்கும் இடையே "கிராஸ் டாக்" ஆகி பழக்கமானது. இதையடுத்து 2 ஆவது கணவரை விட்டுவிட்டு சீனிவாசனை மூன்றாவதாக அமுதா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இதனை அறிந்ததும் 2 ஆவது கணவர் துரைராஜ் நேற்று காலை அமுதாவின் வீட்டிற்கு வந்து குழந்தை எங்கே என்று கேட்டார். அப்போது குழந்தையை வேறு ஒருவரிடம் தத்து கொடுத்து விட்டதாக அமுதா கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ் காய்கறி வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து அமுதாவின் முதுகில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அமுதா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 ஆவது கணவர் துரைராஜை கைது செய்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications