நடுராத்திரி.. காட்டுப்பகுதி.. மனைவியுடன் மற்றொருவர்.. கணவன் செய்த வெறிச்செயல்!
மனைவி மற்றும் கள்ளக்காதலனை கணவன் கொன்று சரணடைந்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: கடைசி வரைக்கும் இந்த கள்ளக்காதலை மட்டும் ஒழிக்கவே முடியாது போலிருக்கு. இதனால் இன்னும் எத்தனை கொலைகளும், தலைகளும் உருண்டு விழ போகிறதோ தெரியவில்லை.
கோவில்பட்டியை அடுத்துள்ள கிராமம் மும்மலைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமாரியம்மாள். ஹரிகிருஷ்ணன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். பெரும்பாலும் கேரளாவில்தான் இந்த கட்டிட வேலையை செய்து வருகிறார். அதனால் தன் கிராமத்தில் இவர் இருப்பதே கிடையாது. வேலை விஷயமாக கேரளாவிலேயே இருப்பார்.

மனைவியை கண்டித்தார்
இதனை சாக்காக பயன்படுத்தி கொண்ட தங்கமாரியம்மாள், அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். தன் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் அரசல் புரசலாக மற்றவர்கள் ஹரிகிருஷ்ணனிடம் இந்த முறையற்ற உறவு பற்றி சொன்னார்கள். இது இல்லாமல், ஹரிகிருஷ்ணனே இதை நேரிடையாக பார்த்தார். பின்னர் தன் மனைவியை கூப்பிட்டு , பெருமாளுடன் இனி பேசக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால் தங்கமாரியம்மாள் பெருமாளுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தவே இல்லை.

கேரளாவில் வெள்ளம்
இந்நிலையில், கேரளாவில் வெள்ளநீர் பிரச்சனை ஏற்படவும், ஹரிகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்றுவிட்டார். வெள்ள பாதிப்பில் தாங்கள் கட்டி வரும் கட்டிடங்கள் குறித்து அறிய கேரளாவிலேயே தங்கிவிட்டார். கேரளாவின் பாதிப்பு குறித்து அறிந்த தங்கமாரியம்மாள், இப்போதைக்கு ஹரிகிருஷ்ணன் ஊருக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில் வழக்கம்போல் பெருமாளுடன் ஊர்சுற்ற கிளம்பிவிட்டார்.

காட்டுப்பகுதியில் மனைவி
இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் நேற்றிரவு தன் கிராமத்துக்கு வந்தார். வீட்டில் மனைவியை காணோம். வீடும் பூட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் மனைவியை தேட ஆரம்பித்தார். அப்போது ஊரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் மனைவியும் பெருமாளும் ஒன்றாக இருப்பதை கண்டு ஹரிகிருஷ்ணன் ஆத்திரமடைந்தார்.

போலீசில் சரண்
இருவரையும் அரிவாளால் அங்கேயே சரமாரியாக வெட்டினார். இதில் இருவருமே சுருண்டு விழுந்து இறந்தனர். கொலை செய்துவிட்ட ஹரிகிருஷ்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, ஹரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications