பல ஆண்களுடன் தொடர் பழக்கம்.. லாட்ஜுக்கு அழைத்து மனைவியைக் கொன்ற கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் திருமணத்தை மறைத்து விட்டு தன்னை மணந்தது,பின்னர் தன்னை விட்டுப் பிரிந்து வந்து பல ஆண்களுடன் தகாத உறவுகளில் ஈடுபட்டது ஆகியவற்றால் வெறுப்படைந்த ஒரு டிரைவர், தனது மனைவியை மகாபலிபுரம் கூட்டிச் சென்று அங்கு லாட்ஜில் வைத்துக் கொலை செய்தார்.

மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதி அறையில் கடந்த 17ம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி, போலீசார் விசாரித்தனர். அதில் அப்பெண் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கிரார்மத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் மகள் பிரியா (22) என்றும், சென்னை வடபழனியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார் திருவாரூர் மாவட்டம், பைங்கநாடு பகுதியை சேர்ந்த வீரசேனன் மகன் மணிமாதவன் (27) என்பவரை நேற்று கைது செய்தனர்.

வால்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் மணிமாதவன் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அப்போது, பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா கர்ப்பம் ஆனார். ஆனால் கருவை கலைத்ததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மேலும், பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்ததும், அதை மறைத்து மணிமாதவனை திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதுபற்றி பிரியாவிடம் கேட்டபோது,மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, பிரியா சென்னைக்கு வந்து வேலை செய்துள்ளார்.

அவரை பின்தொடர்ந்து மணிமாதவனும் சென்னை வந்து, வளசரவாக்கத்தில் தங்கியிருந்து தனியார் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்தார். வடபழனியில் வேலை பார்க்கும் பிரியாவை கண்காணித்து வந்தார்.

அப்போது பிரியாவுக்கும் பல ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதும், அவர் தவறான பாதையில் போய் வருவதையும் அறிந்தார். இதனால் கொதிப்படைந்த அவர் பிரியாவை பழி தீர்க்க தீர்மானித்தார்.

பிரியாவுடன் போனில் பேசிய அவர், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதை பிரியாவும் ஏற்றார். பின்னர் மகாபலிபுரம் கூட்டிச் சென்றார். அங்கு அறை எடுத்துத் தங்கினர். 17ம் தேதி காலையில் வெளியில் போய் விட்டு பிற்பகலில் அறைக்கு வந்தனர். அங்கு பிரியாவை கடுமையாக தாக்கினார் மதன். அவரது தலையை சுவற்றோடு வைத்து சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A lorry driver killed his wife for having illiicit releationship with many men.
Please Wait while comments are loading...