6 லட்சம் கடனுக்கு 56 லட்சம் வட்டி – கந்துவட்டி கொடுமை... தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவி!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூபாய் 6 லட்சம் கடனுக்கு வட்டியாக ரூபாய் 56 லட்சம் கேட்டு மிரட்டும் கந்து வட்டிக்காரரை கண்டித்து கடன் வாங்கிய கணவனும், மனைவியும் விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அளித்துள்ள மனுவில், "கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பக்கத்து ஊரான கோட்டக்கரையை சேர்ந்த விஜயன் என்பவரிடம் 6 லட்சம் ரூபாயை இரண்டு பைசா வட்டிக்கு வாங்கினோம்.
மாதம் 3௦௦௦ ரூபாய் வட்டி கொடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் அசலும், வட்டியுமாக 56 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து இருவரும் திரும்பிச் சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications