ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிலுவையில் அறைந்து கொண்ட ஷிஹான் ஹுசைனி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி.

ஹுசைனி கராத்தே வீரர் மட்டுமல்ல.. திரைப்படங்களில் அடிக்கடி தலைகாட்டியிருக்கிறார். பரபரப்புக்குப் பஞ்சமில்லாதவர்.

கடந்த 2013-ம் ஆண்டு 11 லிட்டர் மனித ரத்தத்தைச் சேகரித்து ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்தார்.

இப்போது, ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, பெரிய மர சிலுவையில் தனது கைகள் மற்றும் கால்களில் பெரிய பெரிய ஆணிகளை அடித்துக் கொண்டுள்ளார்.

அவரது வில்வித்தை மையத்தில் வைத்து இந்த சிலுவையில் அறைந்து கொள்ளும் வேண்டுதல் நிகழ்ச்சியை அவர் நடத்தினார்.












Click it and Unblock the Notifications