ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்ததே திமுக தான்.. எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டதே திமுக ஆட்சியில் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு காரணம் தி.மு.க. தான். அவர்கள் தற்பொழுது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூடம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளேன். அதை சிலர் அரசியலாக்குகின்றனர். தமிழக மக்களுக்கு பாதகமாக இருக்கும் திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கும். மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்தத் திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.
அதேபோல் தமிழக மக்களுக்கு பாதகமாக எது இருக்கிறதோ அதை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த விடமாட்டோம். ஹைட்ரோ ஹார்பன் திட்டம் வருவதற்கு தி.மு.க-தான் காரணம். தற்போது இந்த திட்டத்துக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications