நான் திமுகவுக்கு எதிராக செயல்படவில்லை: மு.க. அழகிரி பதில்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தி.மு.க.வுக்கு எதிராக தாம் செயல்படவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார்.

தி.மு.க தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் கட்சித் தொண்டர்கள் வைக்கக் கூடாது; அவ்வாறு தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அன்பழகனின் இந்த எச்சரிக்கை அறிக்கைக்கு பதில் அளித்துள்ள மு.க. அழகிரி, தி.மு.க.வுக்கு எதிராக நான் செயல்படவில்லை. கட்சிக்கு எதிராக செயல்படாத என் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? கட்சியில் உள்ள குளறுபடிகளை சரி செய்யத்தான் நான் முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications