வாரிசு குறிப்பிட நான் மன்னன் அல்ல... வைகோவின் 'நச்' பேட்டி!
சென்னை: இமயம் தொலைக்காட்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு நச்சென்ற பேட்டி கொடுத்துள்ளார்.
இமயம் கேட்ட சுவையான கேள்விகளுக்கு வைகோ ஒற்றை வரியில் அழகான பதில்களைக் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட திருவிளையாடல் பாணியில் அமைந்த இந்த கேள்வி பதில்களில் வைகோவின் சொல்லாடல் சுகமாக இருக்கிறது...
படித்துப் பாருங்கள்...

முட்களும் பூக்களும் நிறைந்த அரசியல்
உங்கள் பாதையில் அரசியல் என்பது?
முட்களும் பூக்களும் நிறைந்த பாதை.

மனம் கவர்ந்த லட்சியங்கள்
அரசியலுக்கு வரக் காரணம்?
மனதைக் கவர்ந்த லட்சியக்களுக்காகப் பாடுபட.

மனைவியிடம் பிடித்தது
உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த விசயம்?
ஒரு இல்லத்தரசியிடம் இருக்க வேண்டிய அத்தனை இலக்கணங்களும் நிறைந்து இருப்பது.

அம்மா சாப்பாடு...
உங்களுக்கு பிடித்த உணவு?
என் தாயார் சமைக்கும் உணவு.

இளஞ்சிவப்பு என்னைக் கவர்ந்தது...
உங்களுக்கு பிடித்த நிறம்?
இளஞ்சிவப்பு (பிங்க்)

கலிங்கப்பட்டி
உங்களுக்குப் பிடித்த ஊர்?
கலிங்கப்பட்டி

மண்டேலாவைப் பார்க்க வேண்டும்
சந்திக்க நினைக்கும் நபர்?
நெல்சன் மண்டேலா

துன்பம் வரும்போது துணிய வேண்டும்
உங்களிடம் உங்களுக்கு பிடித்த / பிடிக்காத விசயம்?
துன்பம் வரும்போது துணிந்து எதிர்கொள்வது பிடிக்கும். சிறிய பிரச்சினைகளைக் கூட மனதில் போட்டு வருத்திக் கொள்வது பிடிக்காது.

பாராட்டிய நேரங்கள்.. சந்தோஷம்
சந்தோஷமாக இருந்த சம்பவங்கள்?
அறிஞர்களும், மேதைகளும் பாராட்டிய நேரங்கள்.

நெஞ்சிருக்கும் வரை .. ஈழப் பயணம்
மறக்க முடியாத சம்பவங்கள்?
நெஞ்சிருக்கும்வரை நீங்காத ஈழப் பயணம் போன்ற பல நிகழ்வுகள்.

ரோல் மாடலே இல்லை
ரோல் மாடல்?
எனக்கு யாரும் ரோல் மாடல் அல்ல.

நேசித்தவர்கள் வீசிய கற்கள்
நீங்கள் மறக்க நினைப்பது?
நான் நேசித்தவர்கள் என்மீது கற்கள் வீசியதை.

மூலபலம்.. என் தொண்டர்கள்
உங்கள் தொண்டர்களை பற்றி?
என்னை இயக்கும் மூலபலம்

ஏமாற்றாதே - ஏமாறாதே
தேர்தல் வாக்குறுதி பற்றிய உங்கள் கருத்து?
ஏமாற்றாதே - ஏமாறாதே

சுழல்களிலும் நீந்துகிறேன்
அரசியலில் சாதித்தது?
சுழல்களிலும் நீந்துகிறேன்.

கடைசி வரை போராடுவேன்
அரசியலில் சாதிக்க நினைப்பது?
"இலட்சியத்துக்காகக் கடைசிவரை போராடினேன் என்ற மதீப்பீட்டைப் பெற வேண்டும்.

நான் பார்த்த ஜகதலப்பிரதாபன்
நீங்கள் பார்த்த முதல் திரைப்படம்?
ஜகதலப்பிரதாபன்

சிவாஜி....
பிடித்த நடிகர்?
சிவாஜிகணேசன்

சாவித்திரி
பிடித்த நடிகை?
சாவித்திரி

லயிக்க வைக்கும் நல்ல படங்கள்
சினிமாவில் ஆர்வம்?
நல்ல திரைப்படங்களில் முழுமையாக லயிப்பேன்.

கடைசி.. பொக்கிஷம்
பார்த்த கடைசி திரைப்படம்?
பொக்கிஷம்

நடிப்பா.. வேண்டாம்
வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
இல்லை.

கால்பந்து பிடிக்கும்
பிடித்த விளையாட்டு?
( வாலிபால் , பாஸ்கட் பாலைத்தவிர) கால்பந்து

தேடிப் பெற்ற நட்புச் செல்வம்...
உங்களுடைய நெருங்கிய நண்பர்கள்? அவர்களைப் பற்றி?
நான் தேடி பெற்றதே நட்புச் செல்வம்தான். பட்டியல் மிக நீண்டது.

அமைந்தேதீரும் தமிழ் ஈழம்
தனித்தமிழ் ஈழம் அமையுமா? அமையாதா?
அமைந்தே தீரும்.

திருக்குறள்
பிடித்த நூல்?
திருக்குறள்

கல்கியைப் பிடிக்கும்
பிடித்த எழுத்தாளர்?
‘கல்கி'

எதையும் தாங்கும் இதயம்
பிடித்த பொன்மொழி?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

சட்டமுத்தன்.. மாணிக்கவாசகம்.. பொன்னரசு
பிடித்த ஆசிரியர்?
பள்ளியில் கவிஞர் சட்டமுத்தன், மாணிக்கவாசகம், கல்லூரியில் பேராசிரியர் பொன்னரசு.

வாரிசு குறிப்பிட நான் மன்னனா...?
உங்களின் அரசியல் வாரிசு?
வாரிசு குறிப்பிட நான் மன்னன் அல்ல.

உறங்குவது போலும் சாக்காடு
தூக்கம் என்பது?
உறங்குவது போலும் சாக்காடு.

மயிர் ஊடாடா நட்பிலும் பொருள் ஊடாடாடக் கெடும்
பணம் என்பது?
மயிர் ஊடாடா நட்பிலும் பொருள் ஊடாடக் கெடும்.

வரம்புக்குட்படாதது ஆசை
ஆசை என்பது?
வரம்புக்குட்படாதது

ஊக்கம் தருவது வெற்றி
வெற்றி என்பது?
ஊக்கம் தருவது.

போதை ஊட்டும்.. பதவி
பதவி என்பது?
ஊழியம் செய்யப் பயன்படும் இக்கருவி தவறு இழைக்கவும் போதையை ஊட்டும்.












Click it and Unblock the Notifications