சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.. கருணாநிதி விரைவில் குணமடைவார்.. அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் கேட்டறிந்தேன், அவர் விரைவில் குணமடைவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் கேட்டறிந்தேன், அவர் விரைவில் குணமடைவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    I am praying for Karunanidhis good health - Health Minister Vijayabaskar

    அவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் இருந்து அவர் அளித்த பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் கேட்டறிந்தேன். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தேன்.

    அவரது உடல்நிலை இப்போது சீராகி இருக்கிறது. அவரது உடல்நிலை பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+