தினகரனுக்கு பதில் கொடுப்பேன்... வழக்கை சந்திப்பேன்- கமல்ஹாசன்
டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் அளித்துள்ள புகார்களுக்கு உரிய பதில் கொடுப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்துள்ள புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் உரிய பதில் கொடுப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் அதற்கு ஆதரவு கொடுப்பீர்களா ? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கமல், ஏற்கனவே வரவேற்பு தெரிவித்து விட்டேன். அதுவே போதுமானது என்றார்.
டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனரே? என கேட்டபோது, அது பற்றி எனக்கு தெரியபடுத்தினால், அதற்குரிய பதிலை தருவேன் என கூறிவிட்டு சென்றார்.
நடிகர் கமலஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் எனவும் வேட்பாளரை திருடன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளரான கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் இளங்கோவன், கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில் வாக்காளர்களை இழிவாக பேசியும், எழுதியும் உள்ளதால் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 500 மற்றும் 501 பிரிவுகளின் கீழ் இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications