என்னைப் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள்: விஜயகாந்த்
சென்னை: என்னை குறித்தும், கூட்டணி குறித்தும் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கும் முன்பும் சரி அறிவித்த பின்னரும் சரி விஜயகாந்தை மையமாக வைத்தே செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இனி விஜயகாந்தை யாரும் நெருங்க முடியாது நாங்களே பதில் சொல்வோம் என்று வைகோ கூறினார்.
வைகோவின் பேச்சே சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது. விஜயகாந்துக்கு எதுவும் பிரச்சினையோ, பிரச்சாரத்தில் பேச மாட்டாரா என்றும் கேள்விகள் எழுந்தது.

மக்கள் நல கூட்டணியின் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. இந்த பிரசாரத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. அதற்கு அவரது உடல்நிலை காரணம் என்றும் கூறப்படுகிறது.
விஜயகாந்த், சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, சிங்கப்பூர் சென்று சில நாட்கள் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. நேற்றிரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானம் ஒன்றிலும் விஜயகாந்த் பெயர் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் நேற்று வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்-புக் மூலம் காட்டுத் தீ போல பரவியது.
இந்த நிலையில், விஜயகாந்த் தனது முகநூல் பதிவில், 'என்னைப் பற்றியோ, நமது கூட்டணி குறித்தோ பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
இதேப்போல, தேமுதிக இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷும் தனது முகநூல் பக்கத்தில், தேமுதிக தலைவர் பற்றியும், தே.மு.தி.க.வைப் பற்றியும் அவதூறு செய்திகளும், அடிப்படை ஆதாரமற்ற செய்திகளும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
குறிப்பாக, விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications