தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் - கமல்ஹாசன்
தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழ் நாட்டை ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான். தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் பற்றி இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது இன்றைய அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நல்ல சம்பளம்
தற்போது உள்ள சூழ்நிலையில் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றார். பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியல்ல என்றும் கூறினார். எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரவேண்டும் என்றும் கூறினார்.

நான் தமிழநான் தமிழன்ன்
நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன். ஓட்டு போட ஆரம்பித்தது முதலே நான் அரசியல்வாதிதான் என்றார். தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான், நான் தமிழன், இந்தியன்தான் என்றும் கமல் கூறினார்.

யார் வேண்டுமானாலும் ஆளலாம்
தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்றும் கமல் தெரிவித்தார். நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டுவிட்டர் அரசியல்
நடிகர் கமல் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து பல போராட்டங்களுக்கு கருத்து கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ கேமராவிற்கு முன்பு தவிர வேறு எங்கும் தனக்கு நடிக்கத் தெரியாது என்றார். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பொதுப்படையான கருத்து கூறியுள்ளார் கமல்ஹாசன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications