மன்னிப்பா? வாய்ப்பே இல்லை.. திமுக எம்பி கனிமொழிக்கு, அண்ணாமலை நோட்டீஸ்.. பரபர பதில்! என்ன நடந்தது?
சென்னை: சொத்து விபரங்கள் தொடர்பான விஷயத்தில் திமுக எம்பி கனிமொழி அண்ணாமலையிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், மன்னிப்பு கோர வலியுறுத்தியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் கனிமொழி எம்பிக்கு, அண்ணாமலை தனது பதிலுடன் வக்கீல் மூலம் பரபரப்பான நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுக தலைவர்களும், அமைச்சர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் அண்ணாமலை திமுக அமைச்சர்கள், தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வீடியோ மூலம் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் திமுக தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.
அதாவது அண்ணாமலை தவறான தகவல்களை வெளியிடுகிறார் எனக்கூறி மறுத்தனர். மேலும் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர்கள் கூறினார். இதன் தொடர்ச்சியாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், நஷ்டஈடு கோரியும் திமுக தலைவர்கள் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை ஒப்புக்கொள்ளவில்லை. மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என அண்ணாமலை கூறி வருகிறார்.
இதற்கிடையே தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பினார். அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் வகையில் சொத்து விபரங்கள் குறித்து வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் தன்னை பற்றி வெளியிடப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீசில் கனிமொழி தெரிவித்து இருந்தார். இந்த வக்கீல் நோட்டீசுக்கு அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார். அதாவது அண்ணாமலை சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் கனிமொழிக்கு நோட்டீஸ் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதில், கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்கமாட்டேன். சட்ட நடவடிக்கை என்ற பெயரில் என் குரலை ஒடுக்க முடியாது. தேவையென்றால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமப்பிப்பேன் என அண்ணாமலை தனது வக்கீல் நோட்டீஸ் மூலம் கனிமொழி எம்பியிடம் தெரிவித்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications