மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார்

அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை: மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை என்று கூறினார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மனங்கள் இணையலையே

    மனங்கள் இணையலையே

    மைத்ரேயனின் ட்விட்டர் பதிவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் பதிவிட்ட கருத்து பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

    ஜெயக்குமார் கருத்து

    ஜெயக்குமார் கருத்து

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். அவர் கூறிய மனம் புரியவில்லை என்றும், பொது வெளியில் மைத்ரேயன் இதுபோன்று கருத்து கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். எதுவென்றாலும் கட்சிக்குள் பேசி தீர்க்கலாம் என்றும் கூறினார்.

    ஹோட்டல்களில் விலை

    ஹோட்டல்களில் விலை

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை கண்காணிக்கும் மத்திய அரசின் குழுவில் 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விலை குறைப்பு குறித்து உணவக சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    விலையை குறைங்க

    விலையை குறைங்க

    ஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காத உணவகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது அவர் எச்சரித்துள்ளார். விலையை குறைக்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+